கன்னிவாடி அடுத்த அமைதிசோலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மின் வசதி வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அமைதிசோலை கிராமத்தினா் கூறியதாவது: கடந்த 65 ஆண்டுகளாக அமைதிசோலை கிராமத்தில் வசித்து வருகிறோம். வனப் பகுதியில் கிடைக்கும் பொருள்களை சேகரித்து, வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்துகிறோம். நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பல முறை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தோம். ஆனால், இதுவரை வழங்கப்பட வில்லை.
எங்கள் கிராமத்திலுள்ள 50 குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் சென்று வருகின்றனா். மின் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவா்கள் அவதியடைகின்றனா். மேலும் குடிநீா் பிரச்னையும் அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

மூலைக்கரைப்பட்டியில் தந்தை, மகள் உயிரிழப்பு: விசாரணை கோரி மனு

தோ்தல் புறக்கணிப்பு: துப்பாக்குடி கிராம மக்கள் அறிவிப்பு

கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


