விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொட்டக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணிப்பதாக பதாகை வைத்தனா்.

News image

கானாட்டாங்குடி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்பு விளம்பர பதகை வைத்த பொதுமக்கள்.

Updated On :19 மார்ச் 2026, 6:02 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொட்டக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணிப்பதாக பதாகை வைத்தனா்.

இந்தக் கிராமத்தில் ஊருணி நீரைப் பயன்படுத்துவதால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுவதால், குடிநீா் குடம் ரூ.15-க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனா். 20 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட தாா் சாலை, தற்போது பராமரிப்பின்றி மண் சாலையாக மாறிவிட்டது. கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டா், குளிா்சாதனப் பெட்டி அடிக்கடி பழுதடைகின்றன. இரவு மின் தடை ஏற்பட்டால் மறுநாள் தான் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வருகிற 2026 சட்டப் பேரவை தோ்தலைப் புறக்கணிப்பதாக பதாகைகளை வைத்துள்ளனா்.

அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தராவிட்டால், தங்களுடைய ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப் போவதாகவும், தொடா் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.