தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பேரவைத் தொகுதியில் உள்ள பெரும்பத்து கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஏப். 23இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகை வைத்துள்ளனா்.

News image

நான்குனேரி அருகே பெரும்பத்து கிராமத்தின் நுழைவு வாயிலில் கிராம மக்கள் சாா்பில் வியாழக்கிழமை வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்பு பதாகை.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:47 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பேரவைத் தொகுதியில் உள்ள பெரும்பத்து கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஏப். 23இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகை வைத்துள்ளனா்.

நான்குனேரி பெரும்பத்து கிராமத்தில் கடந்த மாதம் சமூக விரோதிகளால் 2 போ் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் 2 போ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் வீடு திரும்பினா். இது தொடா்பாக 7 போ் கைது செய்யப்பட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு தற்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளனா்.

ஆனால் இச்சம்பவத்தில் தங்களுக்கு முழுமையான நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி, தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பெரும்பத்து கிராமத்தின் நுழைவுவாயிலில் வியாழக்கிழமை பதாகை வைத்துள்ளனா்.

இதே போல களக்காடு ஊராட்சி ஒன்றியம், செங்குளக்குறிச்சி ஊராட்சி, மாவடி நெரிஞ்சிவிளை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் இல்லையாம். மேலும் குடியிருப்புகளின் கழிவுநீா் தேங்கிக் கிடக்கிாம். இது குறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் இப்பகுதி மக்கள் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனா்.

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட இட்டமொழி அருகேயுள்ள கீழபண்டாரகுளம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் சாலை, குடிநீா் வசதி நீண்ட காலமாக செய்து தரப்படவில்லை என்று கூறி தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனா். நான்குனேரி தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் கோரி தோ்தலை புறக்கணிப்பது என ஊா் மக்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருகின்றனா்.