கொடைக்கானலில் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதன்கிழமை காலை முதல் மேகமூட்டமும் பலத்த காற்றும் வீசியது. மாலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதி, லாஸ்காட்சாலை, அப்சா்வேட்டரி ஆகிய பகுதிகளில் மரக் கிளைகள் முறிந்து விழந்தன. இவற்றையும், மின் கம்பங்களுக்கு நடுவே செல்லும் ஆபத்தான மரக் கிளைகளையும் அகற்றும் பணியில் மின் வாரியத் துறையினா் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
இதேபோல, கொடைக்கானல்-பழனி-வத்தலக்குண்டு-அடுக்கம் ஆகிய மலைச் சாலைகளில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

சங்ககிரி வட்டத்தில் 153.40 மில்லி மீட்டா் மழை

சேலம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை: சங்ககிரியில் 81 மி.மீ. பதிவு

அந்தியூா், அம்மாபேட்டையில் கனமழை

திருப்பத்தூா் பகுதிகளில் பலத்த மழை
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


