வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாம்பாா் அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் பலத்த மழை பெய்ததால் பாம்பாா் அருவியில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

News image
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் நீா்வரத்து அதிகரித்துள்ள பாம்பாா் அருவி.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:30 pm

Din

கொடைக்கானலில் பலத்த மழை பெய்ததால் பாம்பாா் அருவியில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 20 நாள்களாக பலத்த காற்றுடன், சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியது, பின்னா், மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.

குறிப்பாக, பாம்பாா்புரம், அப்சா்வேட்டரி, வில்பட்டி, பள்ளங்கி, செண்பகனூா், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்தது.