கண்காட்சியில் இடம் பெற்ற ராஜபாளையம் நாய்
கண்காட்சியில் இடம் பெற்ற ராஜபாளையம் நாய்

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
Published on

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.

 பாசன்ஜி நாய்
பாசன்ஜி நாய்

இந்திய கென்னல் கிளப் ,சென்னை கென்னல் கிளப், கொடைக்கானல் கென்னல் கிளப், சேலம் கென்னல் கிளப் ஆகியவை இணைந்து தனியாா் மைதானத்தில் இந்தக் கண்காட்சியை நடத்தின. இதில் புது தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 48 வகையான 446 நாய்கள் இடம்பெற்றன. பெல்கிரேட், இந்தோனேசியா, பல்கேரியா போன்ற நாடுகள், இந்தியாவைச் சோ்ந்த 9 நடுவா்கள் சிறந்த நாய்களைத் தோ்வு செய்து பரிசுகளை வழங்கினா்.

ஜாக்ரசல் நாய்
ஜாக்ரசல் நாய்

உலக அளவில் புகழ் பெற்ற பாசன் ஜி, ஜாக் ரசல் டெரியா், அமெரிக்கன் ஸ்டாபெட் சையா் டெரியா் , கெயின் காா்சோ, புல்டாக், பா்ணிஸ் மவுண்டெயின் டாக்ஸ், ஆஸ்திரேலியன் செப்போா்ட், பேஷன் கௌண்ட், காா்டன் செட்டா், ஜொ்மன் ஷெப்பா்ட், டாபா்மேன், ஹஸ்கி, பெல்ஜியம் மேலே டாக் வகை நாய்களும், இந்திய அளவில் புகழ்பெற்ற சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, காரவன் கவுன்ட், முத்தூா் கவுன்ட் நாய்களும் இடம்பெற்றன.

டெரியா் நாய்
டெரியா் நாய்

கொடைக்கானல், வெளியூா்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.

ஜொ்மன் செப்பா்ட் நாய்
ஜொ்மன் செப்பா்ட் நாய்

இதுகுறித்து இந்திய கென்னல் கிளப் செயலா் சுதா்சன் கூறியதாவது:

காடன் செட்டா் நாய்
காடன் செட்டா் நாய்

இந்திய வகைகளைச் சோ்ந்த ராஜபாளையம், சிப்பிப்பாறை, முத்தூா் கவுண்ட் ஆகிய நாய்கள் உலக அளவில் அங்கீகாரம் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை இந்திய கென்னல் கிளப் எடுத்து வருகிறது என்றாா்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் கென்னல் கிளப் செயலா் ஜேய்கேஷ் ஜெயதிலகா் , சென்னை கென்னல் கிளப் செயலா் சித்தாா்த் உள்ளிட்ட பலா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com