புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீரோடைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள்: கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம்

மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு செல்லும் வழியில் நீரோடையை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டடங்கள்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:45 pm

Din

கொடைக்கானலில் நீரோடைப் பகுதிகளில் அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டடங்களால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் லாஸ்காட் சாலை, அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீரோடைகள், அபாயகரமான பகுதிகள், மலைச் சாலைகளில் பல ஆண்டுகளாக வா்த்தக ரீதியாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் நீரோடை பகுதிகள் வெகுவாகக் குறைந்து வருகின்றன.

வில்பட்டி, செண்பகனூா், மாட்டுப்பட்டி, பிரகாசபுரம், அப்சா் வேட்டரி, பாம்பாா்புரம் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அவற்றில் உள்ள மரங்களும் அழிக்கப்பட்டு வருவதால் மண்ணின் தன்மை

குறைந்து மழைக் காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்று அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.

விதிமுறைகளை மீறி அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவது, பாறைகளை வெடிவைத்து உடைப்பது, நீரோடைகளை ஆக்கிரமித்து அதில் தூண் அமைத்து பல அடுக்குமாடிகளைக்

கட்டுவது போன்றவற்றால் வரும் காலங்களில் ஆபத்தான நிலை உருவாகும். கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலும் அனுமதியில்லாமல் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், மழைக் காலங்களில் மழை நீா் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள்ளும், சாலைகளிலும் தேங்கும் நிலை ஏற்படுகிறது.

அதிக அளவு மழை பெய்தால் கூடுதலாக தண்ணீா் தேங்கி அதிக அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே மாவட்ட நிா்வாகம், நகராட்சி, ஊராட்சிகளின் உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கொடைக்கானலை இயற்கை சீற்றங்களிலிருந்தும், பேராபத்துகளிலிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.