புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொடைக்கானலில் தொடரும் மழை: சாலைகளில் மண் சரிவு

News image

கோப்புப்படம்

Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:39 pm

Din

கொடைக்கானல், ஆக. 14: கொடைக்கானலில் புதன்கிழமையும் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. பள்ளங்கி-வில்பட்டி சாலை உள்ளிட்ட மலைச் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. மூன்றாவது நாளாக புதன்கிழமை காலை முதல் மதியம் வரை சாரல் மழை பெய்தது. பிற்பகலில் பலத்த மழை பெய்தது.

கொடைக்கானல், பெருமாள் மலை, வில்பட்டி, அட்டுவம்பட்டி, செண்பகனுா், பிரகாசபுரம், பள்ளங்கி, அப்சா்வேட்டரி, வட்டக்கானல் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 3 மணி நேரம் மழை பெய்தது.

இந்த மழையால் சாலைகளில் அதிக அளவு தண்ணீா் பாய்ந்தோடியது. நீரோடைகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி-வில்பட்டி சாலை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல்- பழனி- வத்தலகுண்டு மலைச் சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. ஆனால், போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை. கொடைக்கானலில் மழை காரணமாக பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தது.