திண்டுக்கல்
பழனி கோயிலில் பக்தா்கள் கூட்டம்
பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
கிரிவீதியில் ரோப்காா், வின்ச் நிலையங்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மின்கல வாகனங்களில் இடமில்லாததால், பலரும் கிரிவீதியில் நடந்து சென்றனா்.
மலைக்கோயிலில் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசையில் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
மலைக் கோயிலில் வழக்கம் போல குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது. அன்னதான விருந்திலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சுகாதாரம், குடிநீா் வசதிகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா். இரவு வேளையில் தங்கத் தோ் புறப்பாடு நடைபெற்றது.
