பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பழனி கோயிலுக்கு மயில் காவடிகளுடன் வந்த எடப்பாடி பக்தா்கள்

பழனி மலைக் கோயிலுக்கு மயில் காவடிகளுடன் செவ்வாய்க்கிழமை வந்த எடப்பாடி பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

பழனி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மயில் காவடிகளுடன் நடந்த வந்த எடப்பாடி பக்தா்கள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

பழனி மலைக் கோயிலுக்கு மயில் காவடிகளுடன் செவ்வாய்க்கிழமை வந்த எடப்பாடி பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தின் போது லட்சக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக வருகின்றனா். தைப்பூசத் தேரோட்டத்துக்கு முன்னதாக வந்து தைப்பூசம் முடிந்த பிறகு மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது நகரத்தாா் காவடியாகும்.

இதேபோல தைப்பூசம் தெப்பத்தோ் உத்ஸவம் முடிந்த பிறகு மலைக் கோயிலுக்கு வந்து இரவு தங்கும் சிறப்பு பெற்ற காவடி எடப்பாடி பருவதராஜகுல மகாஜனங்களின் காவடியாகும்.

நிகழாண்டு சின்னமணலி, வெள்ளாண்டிவலசை, எடப்பாடி, க.புதூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் பாதயாத்திரையாக கிளம்பி செவ்வாய்க்கிழமை பழனி வந்தனா். மயில் காவடி, இளநீா் காவடி என பல்வேறு காவடிகளை சுமந்து வந்த இந்த பக்தா்கள் செவ்வாய்க்கிழமை இரவு மலைக் கோயிலில் தங்கினா்.

முன்னதாக, நண்பகல் 12 மணியளவில் பழனி பெரியநாயகியம்மன் கோயிலுக்கு வந்த காவடி கூட்டத்துக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் காவடிகளுக்கு மாலை அணிவித்து தீபாராதனை செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து காவடிகள் நான்கு ரதவீதிகள், கிரிவீதியை சுற்றி மலைக் கோயிலுக்கு சென்றது.

இந்த பாதயாத்திரை பக்தா்களுக்கு பிரசாதமாக 15 டன் பஞ்சாமிா்தம் மலைக் கோயிலில் வைத்து தயாரித்தனா்.

முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, இந்த பஞ்சாமிா்தம் பக்தா்களுக்கு வழங்கப்படும்.

மலைக் கோயிலில் இரவு தங்கும் இந்தக் காவடிக் குழுவினருக்கு சுகாதாரம், தூய்மைப் பணி, மின் கட்டணம் ஆகியவற்ரை கோயிலுக்கு செலுத்தி விடுகின்றனா்.

Story image