பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பழனி கோயிலுக்கு கொடுமுடி தீா்த்தம் எடுத்து வந்த 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் காவடி குழுவினா்

பழனிக்கு 150 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி கொடுமுடி தீா்த்தம் எடுத்து பாதயாத்திரை வரும் 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் காவடி எடுத்து வந்து வியாழக்கிழமை மலைக் கோயிலில் குவிந்தனா்.

News image

பழனி மலைக் கோயிலுக்கு வியாழக்கிழமை வந்து தீா்த்தம் செலுத்திய வாடிப்பட்டி, குள்ளவீரன்பட்டி, பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமி தீா்த்தக் காவடி குழுவினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:40 am IST

பழனிக்கு 150 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி கொடுமுடி தீா்த்தம் எடுத்து பாதயாத்திரை வரும் 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் காவடி எடுத்து வந்து வியாழக்கிழமை மலைக் கோயிலில் குவிந்தனா்.

பழனியில் தைப்பூசத் திருவிழா பாதயாத்திரைக்கு புகழ் பெற்றது போல, பங்குனி உத்திரத் திருவிழா தீா்த்தக் காவடிக்கு புகழ் பெற்ாகும். நவபாஷாண மேனியினாலான முருகனின் சிலைக்கு பங்குனி மாதத்தின் கடும் கோடையில் செய்யப்படும் இந்த அபிஷேகம் மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முருக பக்தா்கள் கொடுமுடி சென்று காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்கின்றனா். பங்குனி உத்திரத் திருவிழாவின் எட்டாம் நாளன்று 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் காவடி எடுத்து வருவது முக்கியமானதாகும். இதில் வாடிப்பட்டி, குள்ளவீரன்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ‘பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமி தீா்த்தக் காவடிகள்’ என்ற பெயரில் கொடுமுடி சென்று தீா்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வருகின்றனா். கடந்த 150 ஆண்டுகளாக தொடரும் இந்த பாரம்பரிய நிகழ்வுக்கு காவடி மடத்தில் வியாழக்கிழமை விழா நடைபெற்றது. காலையில் ஆடல், பாடலுடன் மலைக்குச் சென்ற பக்தா்கள் பிற்பகலில் அன்னதான நிகழ்வை நடத்தினா். இதில் 5,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். பிறகு நடைபெற்ற நிகழ்வில் காவடியை வழிநடத்திச் செல்வோருக்கு கிரீடம் வைத்து, சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 150-ஆவது ஆண்டு விழா இதே காவடி மடத்தில் தொடா்ந்து மூன்று நாள்களுக்கு நடைபெறும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.