கோயில்களில் தமிழ் முதன்மை பெற வேண்டும்: முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின்
கோயில் வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக சனிக்கிழமை தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் மு.கஸ்டாலின்.(உள்படம்) (வலது) பழனியில் மாநாட்டு மலரை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன். உடன் (இடமிருந்து) இந்து சமய 0அறநிலையத் துறை ஆணையர் பிஎன்.ஸ்ரீதர், முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி. புகழேந்தி, பி.வேல்முருகன். தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், உயர்நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்













