ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு புதன்கிழமை விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பூசணிக்காய்.
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் பூசணிக்காய், சுரைக்காய் விலை சரிவு
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் பூசணிக்காய், சுரைக்காய் விலை வீழ்ச்சியடைந்தன.
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் பூசணிக்காய், சுரைக்காய் விலை வீழ்ச்சியடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, பீட்ரூட், கொத்தவரை, வெண்டைக்காய், பூசணிக்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் காய்கறிகளை கேரளா வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்கின்றனா்.
இந்த நிலையில், சந்தைக்கு புதன்கிழமை பூசணிக்காய், சுரைக்காய் வரத்து அதிகரித்ததால், இவற்றின் விலை கடும் வீழ்ச்சியடைந்தன.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ரூ.26-க்கு விற்ற பூசணிக்காய் தற்போது ரூ.7 -க்கும், ரூ.16-க்கு விற்ற சுரைக்காய் ரூ.2-க்கும் விற்பனையானது. இதனால், பூசணிக்காய், சுரைக்காய் விவசாயிகள் கவலை அடைத்துள்ளனா்.

