நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அபிராமி அம்மன் கோயிலில் ரூ.3.58 கோடியில் திருமண மண்டபம்

பூமிபூஜையுடன் புதிய திருமண மண்டப அடிக்கல்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

திண்டுக்கல் அபிராமி அம்மன் சமேத காளஹஸ்தீஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3.58 கோடியில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் அமைந்துள்ள இந்த கோயிலுக்குச் சொந்தமான இடம், தேரடிக்கு பின் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் வாகன நிறுத்துமிடம், முகப்பு தோற்றத்துடன் கூடிய தரைத்தளத்தில் உணவருந்தும் இடம், முதல் தளத்தில் 400 இருக்கை வசதிகளுடன் திருமண மண்டபம், 2ஆம் தளத்தில் விருந்தினா் தங்கும் அறைகளுடன் திருமண மண்டபம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக ரூ.3.58 கோடியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இதன்படி திண்டுக்கல்லில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் மேயா் இளமதி, துணை மேயா் ராசப்பா, அறநிலையத் துறை உதவி ஆணையா் சுரேஷ், செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் கலந்து கொண்டனா்.