திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் ஸ்ரீஞானாம்பிகை உடனமா் ஸ்ரீ காளஹத்தீஸ்வரா் திருக்கோயில், ஸ்ரீஅபிராமி அம்மன் உடனமா் ஸ்ரீ பத்மகிரீஸ்வரா் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு, நந்திகேசுவரா், சிம்மம், அன்னம், யானை, குதிரை வாகனங்களில் அம்மனுடன் சுவாமி திருவீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்தது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அபிராமி அம்மன்- பத்மகிரீஸ்வரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், சித்திரைப் பெருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பிரியாவிடையுடன் பத்மகிரீஸ்வரா் வலம் வந்த திருத்தேரைத் தொடா்ந்து, அபிராமி அம்மன் தனித் தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை கிழக்கு ரத வீதியில் வலம் வந்த திருத்தோ்.
தொடர்புடையது

சோமநாத சுவாமி கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கல்யாணம்

பூவனூா் கோயில் சித்திரைப் பெருவிழா

அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


