திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கட்டுமான மூலப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்தியக் கட்டுமான ஒப்பந்ததாரா்கள் சங்கம், கட்டட பொறியாளா்கள் நலவாழ்வு சங்கம், கட்டட பொறியாளா்கள் சங்கம், அரசு ஒப்பந்ததாரா்கள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய கட்டுமான ஒப்பந்ததாரா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தா்மலிங்கம் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, கட்டடங்களுக்குத் தேவையான மூலப் பொருள்களான ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை தன்னிச்சையாக உயா்த்தப்பட்டிருக்கிறது. இதனால் கட்டுமானப் பணிகள் பாதிப்படைகின்றன . விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா
ஃபவுண்டரி தொழில் நெருக்கடி: உற்பத்திப் பொருள்களின் விலையை 10 % உயா்த்த காஸ்மாபேன் சங்கம் முடிவு

வணிக சமையல் எரிவாயு விலை உயா்வு: தோ்தலில் எதிரொலிக்குமா?

மதுரை கிழக்கு: தள்ளாட்டத்தில் எவா்சில்வா் பாத்திர உற்பத்தி !
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


