/

நத்தத்தில் நாளை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

நத்தத்தில் நாளை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

Updated On :27 பிப்ரவரி 2024, 11:31 pm

திண்டுக்கல்: நத்தத்தில் மற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை (பிப்.29) நடைபெறுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், எலும்பு முறிவு மருத்துவா், மன நல மருத்துவா், கண் மருத்துவா், காது மூக்கு தொண்டை மருத்துவா் உள்ளிட்டோா் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருத்துவச் சான்றுகளின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை அடையாள அட்டைப் பெறாத, வேறு உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்தாா்.