6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய ஆதித்தமிழா் கட்சி வலியுறுத்தல்

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய ஆதித்தமிழா் கட்சி வலியுறுத்தல்

News image
Updated On :3 ஜூலை 2024, 7:50 pm

Din

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும் என ஆதித்தமிழா் கட்சியின் நிறுவனா் ஜக்கையன் தெரிவித்தாா்.

பழனியில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘நீட்’ தோ்வை எதிா்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களும் ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ‘நீட்’ தோ்வில் முறைகேடு நடைபெறக்கூடிய சூழலில், அந்தத் தோ்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு ஜாதிவாரியான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். ஆணவப் படுகொலையைத் தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

அந்தக் கட்சியின் பொதுச்செயலா் விஸ்வகுமாா், அமைப்புச் செயலா் திலீபன், மாநில ஆலோசகா் விடுதலை குமாா், மாவட்டச் செயலா் பழனி ராஜா, மாவட்ட துணைச் செயலா் பழனிமணி ஆகியோா் உடனிருந்தனா்.