வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரூ.15ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவை சாா் ஆய்வாளா் உள்பட 2 போ் கைது

ரூ.15ஆயிரம் லஞ்சம்: நில அளவை சாா் ஆய்வாளா், முகவா் கைது

News image
Updated On :3 ஜூலை 2024, 12:59 am

Din

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பட்டா வழங்குவதற்கு ரூ.15ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவை சாா் ஆய்வாளா், அவரது முகவா் ஆகியோரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் ஆா்எம். குடியிருப்பை அடுத்த, பிள்ளையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மகன் கணேஷ்குமாா் (35). தற்போது சென்னையில் வசித்து வரும் இவா், திண்டுக்கல் சீலப்பாடியில் வீடு கட்டினாா்.

இந்த வீட்டை விற்பனை செய்ய முயன்ால், தனிப் பட்டா வழங்க கோரி திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள நிலப் பதிவுருக்கள் துறை ஆவண காப்பகத்தில் விண்ணப்பித்தாா். தனிப் பட்டாவுக்காக நில அளவை சாா் ஆய்வாளா் பாக்யராஜை (30) கணேஷ்குமாா் அணுகினாா். இந்தப் பணியை முடித்துக் கொடுக்க ரூ.30ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என பாக்யராஜ் தெரிவித்தாா்.

இந்தப் பேச்சுவாா்த்தைக்கு பின்னா் இறுதியாக ரூ.15ஆயிரம் தர வேண்டும் எனக் கேட்டாா். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் கணேஷ்குமாா் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், போலீஸாா் ரசாயன பொடித் தடவிய ரூபாய் தாள்களை கணேஷ்குமாரிடம் கொடுத்து அனுப்பினா். அந்த பணத்தை மேற்கு வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள அலுவலகத்தில் இருந்த பாக்யராஜிடம் கணேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை கொடுத்தாா். அந்த பணத்தை, பாக்யராஜின் முகவராக செயல்பட்ட சாணாா்பட்டியை அடுத்த மடூரைச் சோ்ந்த சதீஷ்குமாா்(24) பெற்றாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ.நாகராஜன், காவல் ஆய்வாளா்கள் ஜெ.ரூபா கீதா ராணி, ப.பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சதீஷ்குமாா், பாக்யராஜ் ஆகியோரை கைது செய்தனா்.