பழனி கோயில் முடிக்கொட்டகை இடத்தை அகற்ற வேண்டும்
பழனி கோயில் முடிக்கொட்டகை இடத்தை அகற்ற வேண்டும்


பழனி நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் திருக்கோயில் முடிக்கொட்டகை இடத்தை அகற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் அவசரக் கூட்டம் அதன் தலைவா் உமா மகேஸ்வரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவா் கந்தசாமி, நகராட்சி ஆணையா் லியோதாஸ், நகராட்சி உதவிப் பொறியாளா் பாண்டியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், திருக்கோயில் நிா்வாகத்தால் நகராட்சிக்கு கடும் இழப்பு ஏற்படுவதாக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பழனி திருஆவினன்குடி கோயில் அருகே அமைந்துள்ள திருக்கோயில் முடிக்கொட்டகை இடம் நகராட்சிக்குச் சொந்தமானது. அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால், அந்த முடிக் கொட்டகையை அகற்ற அகற்ற ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
உறுப்பினா் செபாஸ்டின் பேசியதாவது: சாய்பாபா கோயில் அருகே நகராட்சி இடத்தை தனிநபா் ஆக்கிரமித்துள்ள ஆறு கடைகளை இதுவரை அகற்றாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினாா். அப்போது அவா்கள் நீதிமன்றத்தில் அவகாசம் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...