தமிழகம் போதைப் பொருள்களின் சந்தையாக மாறிவிட்டது: முன்னாள் அமைச்சா் இரா.விசுவநாதன்
தமிழகம் போதைப் பொருள்களின் சந்தையாக மாறி சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது என முன்னாள் அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தாா்.


திண்டுக்கல்: தமிழகம் போதைப் பொருள்களின் சந்தையாக மாறிவிட்டதால், சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது என முன்னாள் அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வரும்போதெல்லாம் கள்ளச்சாராய விற்பனை அதிகரிக்கிறது. விழுப்புரத்தை அடுத்த மரக்காணம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 80-க்கும் மேற்பட்டோா் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டனா். இதேபோல, கஞ்சா, அபின் உள்ளிட்டப் போதைப் பொருள்களின் சந்தையாக தமிழ்நாடு மாறிவிட்டது. இவற்றை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரிப்பால், சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது.
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை. இதுபோன்று மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்னையை சட்டப்பேரவையில் எழுப்பியதால், அதிமுக உறுப்பினா்களை வெளியேற்றம் செய்தனா். இந்த சா்வாதிகார ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...