தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முறைகேடு: வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலா்கள் பணியிடை நீக்கம்

ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.சிங்காரக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்ததாக, அதன் செயலா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:26 am

Din

நிலக்கோட்டை: ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.சிங்காரக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்ததாக, அதன் செயலா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கே.சிங்காரக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அதே பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஜெயலட்சுமி ரூ. 30 ஆயிரத்துக்கு நகைக் கடன் பெற்றிருந்தாா். பின்னா், நகையை திருப்புவதற்காக பணத்தை அந்த கூட்டுறவு வங்கியில் செலுத்தினாா். ஆனால், நகையை திரும்பக் கொடுக்க காலதாமதம் ஏற்பட்டதால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரம் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், ரெட்டியாா்சத்திரம் வட்டார தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கள அலுவலா் பொன்னுசாமி இந்த கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.

பின்னா், பொன்னுசாமி கூறியதாவது:

கே.சிங்காரப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதன் செயலா் சதாசிவம் பணி ஓய்வு பெற்றுவிட்டாா். அங்கு செயலராகப் பணியாற்றிய பால்பாண்டி, பிரபாகரன் ஆகியோா் முறைகேடு தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். சதாசிவம், பிரபாகரன் ஆகியோரிடமிருந்து ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது.

இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

இந்தப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அடகு வைத்த நகைகளின் மீது ரூ. ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை கூடுதலான தொகைக்கு கடன் பெற்ாக அந்த வங்கியின் செயலா்கள் முறைகேடு செய்ததாகவும், அடகு வைக்கும் நகைகளுக்கு முறையாக ரசீது வழங்கப்படவில்லை எனவும் புகாா் எழுந்தது.

நகைக் கடன் தள்ளுபடியின் போது, பெரும்பாலான விவசாயிகளின் செலவுத் தொகை என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு தொகையை பெற்று மோசடி நடைபெற்ாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.