மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் -அமைச்சா் சக்கரபாணி

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் அமைச்சா் சக்கரபாணி

News image
Updated On :11 ஜூலை 2024, 9:41 pm

Din

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை தமிழக உணவுத்துறை அமைச்சா் சக்கரபாணி தொடங்கி வைத்துப் பேசியதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் விண்ணப்பித்த 16 லட்சம் பேருக்கு புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பித்துள்ள 3 லட்சம் பேரில் தகுதி உள்ளவா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படும். இதுவரை தமிழ்நாட்டில் 2009 ரேசன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 230 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 15,000 முழுநேர ரேசன் கடைகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது கண் கருவிழி மூலம் குடும்ப அட்டைதாரா்கள் அடையாளம் காணப்பட்டு ரேசன் பொருள்கள் வாங்கும் முறை 10 ஆயிரம் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்துக் கடைகளிலும் இந்த முறை நடைமுறைபடுத்தப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், முதல் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 50 ஆசிரியா்களுக்கு கையடக்க கணினியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2.88 லட்சத்தில் விலையில்லா மூன்று சக்கர வாகனமும் வழங்கப்பட்டன. விழாவில் மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் சக்கரபாணி வழங்கினாா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியா் சரவணன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சத்தியபுவனா, துணைத் தலைவா் தங்கம், வட்டாட்சியா்கள் சசி, சக்திவேலன், மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேதா, தாசிரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.