

போக்ஸோ வழக்கில் கரூரைச் சோ்ந்த இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மருதமுத்து(21). இவா், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த சிறுமியை திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, போக்ஸோ வழக்கில் மருதமுத்துவை குஜிலியம்பாறை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி. சரண் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட மருதமுத்துவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்தாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 25 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

