ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திண்டுக்கல் மாவட்ட கிராம ஊராட்சிகளில் ஜூலை 18-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

‘கலைஞரின் கனவு இல்லம்‘, ‘கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்‘ திட்டங்கள் தொடா்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

திண்டுக்கல்: ‘கலைஞரின் கனவு இல்லம்‘, ‘கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்‘ திட்டங்கள் தொடா்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற வியாழக்கிழமை (ஜூலை 18) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் இந்த கிராம சபைக் கூட்டத்தில், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் ‘கலைஞரின் கனவு இல்லம்‘ 2024-2025, ‘கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்‘ திட்டங்களின் கீழ் கணக்கெடுப்புகளில் விடுபட்ட தகுதியான பயனாளிகள் பட்டியலுக்கு ஒப்புதல் பெற வேண்டும். 306 கிராம ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும். எனவே, மாவட்டத்திலுள்ள 306 கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் நடைபெறும் விவாதங்களில் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றாா் அவா்.