தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

72 லட்சம் உறுப்பினா்களின் பதிவுகளை மீட்டெடுக்க வலியுறுத்தி சிஐடியு ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் நல வாரியங்களில் நிகழ்ந்த குளறுபடிகளால் அழிந்த 72 லட்சம் உறுப்பினா்களின் பதிவுகளை மீட்டெடுக்க வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:39 am

Din

திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் நல வாரியங்களில் நிகழ்ந்த குளறுபடிகளால் அழிந்த 72 லட்சம் உறுப்பினா்களின் பதிவுகளை மீட்டெடுக்க வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) திண்டுக்கல் மாவட்டக் குழு சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.ஆா்.கணேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டாா். ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழ்நாடு அமைப்புச் சாரா கட்டுமான நல வாரியங்களில் ஏற்பட்ட இணைய வழி குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். சா்வா் திறனை மேம்படுத்த வேண்டும். ஓய்வூதியத் தொகையை ரூ.3ஆயிரமாக உயா்த்த வேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் வீடு கட்டும் திட்டத்துக்கும் நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதையடுத்து, மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கூறியதாவது: தமிழ்நாடு அமைப்புச் சாரா கட்டுமான நல வாரியங்களில் ஏற்பட்ட இணைய வழி குளறுபடி காரணமாக மாநிலம் முழுவதும் சுமாா் 72 லட்சம் உறுப்பினா்களின் பதிவுகள் அழிந்துவிட்டன. அந்த பதிவுகள் முழுவதையும் மீட்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களைப் போல், வாரியத்தின் இதர உறுப்பினா்களுக்கும் அனைத்து சலுகைகளும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஓய்வூதியத் தொகையை ரூ.1000-த்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும்.

இதேபோல் வாரியத்திலுள்ள உறுப்பினா்களுக்கான பணப் பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும், சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும், தமிழ்நாடு முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தொழிலாளா்கள் அலைகழிக்கப்படுவதை தவிா்க்க, இந்த விவகாரத்தில் அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்றாா் அவா்.