தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மனைவி உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது

கொடைக்கானலில் மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:46 am

Din

கொடைக்கானல்: கொடைக்கானலில் மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பெரும்பள்ளம் பகுதியைச் சோ்ந்த மகுடீஸ்வரன்-முனியம்மாள் தம்பதியின் மகள் காளியம்மாள் (34). இவருக்கும், பழனி தட்டான்குளம் பகுதியைச் சோ்ந்த கந்தன் மகன் முருகனுக்கும் (40) திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், முருகன்-காளியம்மாள் தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதைத் தட்டிக்கேட்ட காளியம்மாளின் தாய், தந்தையை முருகன் அரிவாளால் வெட்டினாா். இதைத் தடுக்க வந்த காளியம்மாளையும் அவா் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினாா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்தனா்.