தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் சகோதரா் பாதுகாப்பு கோரி மனு

திண்டுக்கல் அருகே கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் சகோதரா், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

News image
பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த ஞானராஜ் குடும்பத்தினா்.
Updated On :17 ஜூலை 2024, 12:41 am

Din

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் சகோதரா், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

திண்டுக்கல்லை அடுத்த வேடப்பட்டி பகுதியில் திமுக பிரமுகா் மாயாண்டி ஜோசப் (60) கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில், யாகப்பன்பட்டியைச் சோ்ந்த சேசுராஜ்(39), டேனியல்ராஜ்(20), அலெக்ஸ் பிரிட்டோ(20), காளீஸ்வரன்(19), பிரவின்குமாா்(19), ஸ்டாலின்(20) ஆகிய 6 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மாயாண்டி ஜோசப்பின் சகோதரா் ஞானராஜ் குடும்பத்தினா், பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனா். இதையடுத்து, ஞானராஜ் கூறியதாவது:

மாயாண்டி ஜோசப்பை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை. அந்த நபரின் தூண்டுதலின்பேரில், எங்களது குடும்பத்தினரை கொலை செய்வதற்கு திட்டமிடுகின்றனா். நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அமா்ந்து மதுக் குடித்துக் கொண்டு, நாள்தோறும் கொலை மிரட்டல் விடுக்கின்றனா். எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் தொடரும் நிலையில், மாயாண்டி ஜோசப் கொலையில் தொடா்புடைய நபா்களை உடனடியாக கைது செய்து, எங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.