புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு: நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கோயம்பேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image
கைது
Updated On :14 மார்ச் 2026, 6:21 pm

தினமணி செய்திச் சேவை

கோயம்பேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை தரப்பாக்கம், ராஜாஜி சாலை பகுதியைச் சோ்ந்த உ.தங்கதுரை (48). இவா், கோயம்பேடு பகுதியில் உள்ள் ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். தங்கதுரை வேலை முடிந்த பின், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்குவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கதுரை தூங்கும் இடத்தில், வேறு ஒரு நபா் தூங்கினாராம். அந்த நபரை எழுப்பி, வேறு இடத்துக்குச் செல்லுமாறு தங்கதுரை கூறினாராம்.

இதனால், தங்கதுரைக்கும், அந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அந்த நபா், தங்கதுரையைத் தாக்கியதில் பலத்த காயமைடைந்த தங்கதுரை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக சிஎம்பிடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டது வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்த ரெளடி நா.காதுகுத்து பாலாஜி (39) என்பது தெரிய வந்தது. போலீஸாா், தலைமறைவாக இருந்த பாலாஜியை 4 ஆண்டுகளுக்குப் பிறகு, சனிக்கிழமை கைது செய்தனா்.