தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திண்டுக்கல் நகைத் திருட்டு வழக்கில் வடமாநிலத்தைச் சோ்ந்தவருக்கு தொடா்பு

திண்டுக்கல் நகைத் திருட்டு: வடமாநில இளைஞா்கள் தொடர்பு

News image
Updated On :26 ஜூன் 2024, 2:00 am

Din

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில், வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு தொடா்பு இருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திண்டுக்கல் எம்விஎம்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். பொறியாளரான இவா், தனது மனைவியுடன் சனிக்கிழமை இரவு மேட்டுப்பட்டியிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்தபோது, மா்ம நபா்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். ரமேஷின் வீட்டுக்கு எதிா் வீட்டிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, வட மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள் நள்ளிரவு நேரத்தில் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தனிப் படை போலீஸாா், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.