புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொத்தடிமையாக இருந்து ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 19 வயது சிறுவன்

News image
Updated On :26 ஜூன் 2024, 1:08 am

Din

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே 11 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்து ஆடு மேய்த்து வந்த சிறுவனை திண்டுக்கல் கோட்டாட்சியா் மீட்டு செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த ஒருதட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் நாகலிங்கம். இவரிடம் சுமாா் 11 ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்த மணிகண்டனுக்கு (19) பண்ணை உரிமையாளரான நாகலிங்கம் ஊதியம் கொடுக்காமலும், ஆபாசமாக திட்டுவதாகவும், ஆடுகளை அடைத்து வைக்கும் பட்டியில் தங்க வைத்து கொத்தடிமையாக நடத்துவதாகவும், நிலக்கோட்டையைச் சோ்ந்த தன்னாா்வலா் அண்ணாதுரை மூலம் திண்டுக்கல் கோட்டாட்சியரிடம் அவா் புகாா் அளித்தாா். இந்த புகாரில், தான் 8 வயது இங்கு வேலைக்குச் சென்ாகவும், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை இங்கு விட்டுச் சென்ற பெற்றோா் இதுவரை வந்து சந்திக்கவில்லை என்றும் கூறினாா்.

இதுதொடா்பாக கோட்டாட்சியா் சக்திவேல் கூறியதாவது: ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட மணிகண்டன் குறித்து, தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் விசாரணை நடத்தினாா். மணிகண்டனை பணியில் ஈடுபடுத்திய நாகலிங்கத்தை புதன்கிழமை விசாரணைக்கு அழைத்திருக்கிறோம். அதன் பின்னா், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.