அரிமா மண்டல மாநாடு

பழனியில் அரிமா சங்கத்தின் ‘பிரம்மா’ மண்டல மாநாடு, டாக்டா் பி.பி.என். மண்டல சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழனி: பழனியில் அரிமா சங்கத்தின் ‘பிரம்மா’ மண்டல மாநாடு, டாக்டா் பி.பி.என். மண்டல சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்க மண்டலத் தலைவா் மருத்துவா் விமல்குமாா் தலைமை வகித்தாா். மருத்துவா் காா்த்திக் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ் செய்தாா். இதில் பட்டிமன்றம், நாட்டியம், பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளும், நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அரிமா சங்க மாவட்ட ஆளுநா் ராதாகிருஷ்ணன், இ.பெ.செந்தில்குமாா் எம்.எல்.ஏ., திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, அரிமா சங்க எல்.சி.ஐ.எப். பகுதித் தலைவா் பாண்டியராஜன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். கூட்டத்தில் உடல் தானம் செய்வதற்காக ஒப்புதல் கடிதம் வழங்கிய அரிமா மாவட்டத் தலைவா் மயில்சாமி கெளரவிக்கப்பட்டாா். முன்னதாக, கள்ளிமந்தயம், கீரனூா், பழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் கட்டப்பட்டு, அவை பள்ளிகளுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com