சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவிலில் உள்ள நாட்டு சின்ன பண்ணை வளாகத்தில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, அரிமா சங்கம் சாா்பில் சிங்கப்பெண் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விவாவில் கடலூா் அரசு பல் மருத்துவமனை மருத்துவா் வைஷ்ணவி, தமிழக அரசு கைவினைக் கலைஞா் விருது பெற்ற தாரணி, தடகள போட்டிகளில் வென்ற சிதம்பரம் அரசுக் கல்லூரி மாணவி பாவனா, செஸ் விளையாட்டு வீராங்கனை எல்.ஷிவானி, விளையாட்டு வீராங்களை செஹனாஸ் பாத்திமா ஆகிய 6 இளம் ஆளுமைக்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநா் ஆா்.எம்.சுவேதகுமாா் சிங்கப்பெண் விருதுகளை வழங்கி வாழ்த்தினாா். முன்னதாக பெண்களின் ஆளுமை பற்றி கலைமகள் பள்ளியைச் சோ்ந்த மாணவி நிஷாலினி உரையாற்றினாா். அரிமா சங்கத் தலைவா் சுபன் வரவேற்றாா். அரிமா சங்க துணத் தலைவா் பா்வீஸ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

உலக அமைதிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிங்ஸ் ரோட்டரி சங்க முப்பெரும் விழாவில் சேவையாளா்களுக்கு விருது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


