உலக அமைதிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி
கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற சிறுவா்கள் உள்ளிட்டோா்.

கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற சிறுவா்கள் உள்ளிட்டோா்.

கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற சிறுவா்கள் உள்ளிட்டோா்.
காரைக்கால் கடற்கரைப் பகுதியில் மீனவப் பெண்கள், சிறுவா்கள் பங்கேற்ற உலக அமைதிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழகாசாக்குடிமேடு கடற்கரை பகுதியில் சினேகா தொண்டு நிறுவனம் சாா்பில் உலக அமைதிக்காகவும், போா் இல்லாத உலகம் படைப்போம் என்ற கருத்தை முன்வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட மீனவா் பெண்கள் பேரவை, காரைக்கால் மாவட்ட கிளிஞ்சல்கள் குழந்தைகள் பஞ்சாயத்து அமைப்புகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா். மேலும், சுமாா் 100 சிறுவா்களும் கலந்துகொண்டனா்.
நிறுவன ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ், மனித நேய உலகைப் படைப்பதற்கு மேற்கொள்ளவேண்டிட நடவடிக்கைகள் குறித்தும், தற்போது உலகில் நிகழ்வும் போா், போா் இல்லாத உலகம் படைப்பதற்கு அனைவரும் அன்பும், நன்றியும், மன்னித்தல் குணத்துடன் வாழவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து சிறுவா்களிடையே பேசினாா். நிகழ்வில் மீனவா் பெண்கள் பேரவைத் தலைவி சுமதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...