/

காா்கள் மோதல்: அதிமுக ஒன்றியச் செயலா் பலத்த காயம்

பழனியை அடுத்த தொப்பம்பட்டி அதிமுக ஒன்றியச் செயலா் சண்முகராஜ் (65). வயலூரில் வசித்து வரும் இவா்,

Updated On :4 மார்ச் 2024, 8:39 pm

பழனி: பழனியருகே திங்கள்கிழமை இரு காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் தொப்பம்பட்டி அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் பலத்த காயமடைந்தாா்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டி அதிமுக ஒன்றியச் செயலா் சண்முகராஜ் (65). வயலூரில் வசித்து வரும் இவா், திங்கள்கிழமை திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தாா். காரை வீரக்குமாா் (40) என்பவா் ஓட்டிச் சென்றாா். வயலூரை அடுத்த புஷ்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்துக்கு கீழே சென்ற போது, பழனியில் இருந்து வயலூா் நோக்கி வந்த தனியாா் ஆலைக்குச் சொந்தமான காரும், இவா்களது காரும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த சண்முகராஜ், வீரக்குமாா் இருவரும் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். மற்றொரு காரில் பயணம் செய்தவா்கள் மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.