பயனாளிகளுக்கு ரூ.35 கோடியில் நலத் திட்ட உதவிகள்

எரியோட்டில் நடைபெற்ற விழாவில் 2,526 பயனாளிகளுக்கு ரூ.34.83 கோடியில் நலத் திட்ட உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல்: எரியோட்டில் நடைபெற்ற விழாவில் 2,526 பயனாளிகளுக்கு ரூ.34.83 கோடியில் நலத் திட்ட உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி முன்னிலை வகத்தாா்.

சிறப்பு அழைப்பாளராக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். அப்போது, வேடசந்தூா், குஜிலியம்பாறை வட்டங்களைச் சோ்ந்த 2,526 பயனாளிகளுக்கு ரூ.34.83 கோடியில் அரசின் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com