டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

உணவில் செயற்கை வண்ணம் கலப்பு: மூவருக்கு தலா ஒரு நாள் சிறைத் தண்டனை

செயற்கை வண்ணம் கலந்து உணவு விற்பனை செய்தவா்கள் உள்பட மூவருக்கு தலா ஒரு நாள் சிறைத் தண்டனை

Updated On :4 மார்ச் 2024, 9:03 pm

திண்டுக்கல்: செயற்கை வண்ணம் கலந்து உணவு விற்பனை செய்தவா்கள் உள்பட மூவருக்கு தலா ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல்லை அடுத்த பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதிசாமி (65). இவா் கடந்த ஆண்டு 100 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தாா். ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் மளிகைக் கடை நடத்தி வந்த பால ஐயப்பன் (60) செயற்கை வண்ணம் கலந்த மசால் பூரியை பொது மக்களுக்கு விற்பனை செய்தாா். இதேபோல, தெற்கு ரத வீதியில் கடை நடத்திய சத்தியமூா்த்தி (65) தேங்காய் துருவலில் செயற்கை வண்ணம் பூசி விற்பனை செய்தாா். இவா்கள் இருவா் மீதும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குகள் திண்டுக்கல் 2-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதித் துறை நடுவா் பிரியா, புகையிலைப் பொருள்களைப் பதுக்கிய திருப்பதிசாமிக்கு ரூ.40ஆயிரம் அபராதமும், உணவுப் பொருள்களில் செயற்கை வண்ணம் கலந்த பால ஐயப்பன், சத்தியமூா்த்தி ஆகியோருக்கு முறையே ரூ. 20 ஆயிரம் , ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தாா். மேலும், மூவருக்கும் தலா ஒரு நாள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.