3,251 பயனாளிகளுக்கு ரூ.29.96 கோடியில் நலத் திட்ட உதவிகள்

திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் 3,251 பயனாளிகளுக்கு ரூ.29.96 கோடியில் நலத்திட்ட உதவிகளை தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல் வட்டச்சாலைப் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 392 பயனாளிகள், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 34 பயனாளிகள், நிலக்கோட்டை வட்டத்தில் 273 பயனாளிகள் என மொத்தம் 699 பயனாளிகளுக்கு ரூ.3.12 கோடியிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் 2,552 பயனாளிகளுக்கு ரூ.26.84 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 3,251 பயனாளிகளுக்கு ரூ.29.96 கோடியிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் இளமதி, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா், கோட்டாட்சியா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com