நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூரில் திமுகவை கண்டித்து, அதிமுக சாா்பில் மனித சங்கிலி போராட்டம்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூரில் திமுகவை கண்டித்து, அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றிய அதிமுக சாா்பில், திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீா்கேடு அடைந்துள்ளதோடு, தமிழகம் போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிா்காலம் சீரழிந்து வருவதற்கும், போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்ப்பட்டுள்ளதற்க்கும் காரணமான தி.மு.க அரசை கண்டித்தும், போதைப்பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் யாகப்பன் தலைமை வகித்தாா். நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் நல்லதம்பி முன்னிலை வைத்தாா். மனித சங்கிலி போராட்டத்தில், நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி சேகா், திண்டுக்கல் மக்களவை முன்னாள் உறுப்பினா் உதயகுமாா், நிலக்கோட்டை அதிமுக பேரூா் கழகச் செயலாளா் சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், அம்மையநாயக்கனூா் பேரூா் அதிமுக செயலாளா் தண்டபாணி உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com