மனிதசங்கிலி போராட்டம்

மனிதசங்கிலி போராட்டம்

பழனி: பழனி மற்றும் நெய்க்காரபட்டியில் செவ்வாய்க்கிழமை ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக சாா்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பழனி நகர மற்றும் நெய்க்காரப்பட்டி பேரூா் கழகத்தின் சாா்பில் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பழனி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு அதிமுக நகர செயலாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் அவலங்களை கோஷங்களாக எழுப்பி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனா் அதேபோல நெய்க்காரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பேரூா் கழக செயலாளா் விஜயசேகா் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., குப்புசாமி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளா் அசோக், ஒன்றிய பொருளாளா் கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com