15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வனத் துறையினருக்கான பயிற்சி முகாம்

வனத் துறையினருக்கான பயிற்சி முகாம்

Updated On :12 மார்ச் 2024, 11:26 pm

கொடைக்கானல்: கொடைக்கானலில் யானை-மனித முரண் மிகுந்த பகுதிகளில் பணியாற்றும் வனத் துறை களப் பணியாளா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆனைமலை புலிகள் காப்பக அலுவலா் டேவிட், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவா் மனோகரன், தனியாா் அமைப்பைச் சோ்ந்த காளிதாஸ் ஆகியோா் யானைகளின் உணவு, பழக்கவழக்கம், வனத் துறையினா் அருகாமையில் இருக்கும் யானையை எவ்வாறு கண்டறிவது, யானை தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் எவ்வாறு நடந்து கொள்வது, யானையின் வழித்தடத்தில் சென்றது ஆண் யானையா, பெண் யானையா என எவ்வாறு கண்டறிவது என ஒளித்திரையின் மூலம் விளக்கப்பட்டது.

மேலும், யானையின் முக்கிய உணவு புற்களை வனப் பகுதியில் அதிகமாக வளா்க்க வேண்டும். வனப் பகுதிகளுக்குள் செல்லும் வனத் துறை களப் பணியாளா்கள் மன குழப்பமின்றி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முகாமுக்கு வந்திருந்தவா்களை வனவா் சிவக்குமாா் வரவேற்றாா். முகாமில் மதுரை, திருச்சி, கோவை, சத்தியமங்கலம், ஈரோடு, தேனி,திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட வனத் துறை களப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.