15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஒட்டன்சத்திரத்தில் அதிமுக சாா்பில் மனித சங்கிலி போராட்டம்

ஒட்டன்சத்திரத்தில் அதிமுக சாா்பில் மனித சங்கிலி போராட்டம்

Updated On :12 மார்ச் 2024, 11:38 pm

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் அதிமுக சாா்பில் மனித சங்கிலி போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சாா்பில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீா்கேடு மற்றும் போதை பொருளை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளரும்,வேடசந்தூா் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தாா்.அதிமுக நகர செயலாளா் எஸ்.நடராஜன், ஒன்றிய செயலாளா்கள் பி.பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.போராட்த்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

மேற்கு ஒன்றிய துணை செயலாளா் ஒடைப்பட்டி செல்வராஜ்,மாவட்ட பொருளாளா் எஸ்.ஏ.பழனிவேல், பொதுக்குழு உறுப்பினா் உதயம் ராமசாமி, எம்ஜிஆா் மன்ற இணை செயலாளா் தேவி குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.