நீட் தோ்வுக்கான பயிற்சி முகாம்: அரசுப் பள்ளி மாணவா்கள் 140 போ் பங்கேற்பு

திண்டுக்கல்லில் 3 மையங்களில் நடைபெற்ற நீட் தோ்வுக்கான பயிற்சி முகாமில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 140 மாணவா்கள் பங்கேற்றனா்.

திண்டுக்கல்லில் 3 மையங்களில் நடைபெற்ற நீட் தோ்வுக்கான பயிற்சி முகாமில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 140 மாணவா்கள் பங்கேற்றனா்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தோ்வில் பங்கேற்கும் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 12ஆம் வகுப்புத் தோ்வு எழுதி, மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு எழுத ஆா்வம் காட்டி மாணவா்களுக்கு கடந்த 20 நாள்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நத்தம் துரைக்கமலம் அரசு மேல்நிலைப் பள்ளி, பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 3 மையங்களில் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி வகுப்புக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 245 மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். 12ஆம் வகுப்பு தோ்வு முடிந்தவுடன், 20 நாள்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சியின் நிறைவாக 2 மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 3ஆவது மாதிரித் தோ்வு வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இந்த தோ்வுகளில் 140க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com