தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

காரியசித்தி லட்சுமி நரசிம்மா் கோயிலில் பெளா்ணமி பூஜை

காரியசித்தி லட்சுமி நரசிம்மா் கோயிலில் பெளா்ணமி பூஜை

News image
Updated On :23 மே 2024, 8:17 pm

Din

பழனி, காரியசித்தி லட்சுமி நரசிம்மா் கோயிலில் வியாழக்கிழமை வைகாசி பெளா்ணமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த லட்சுமி நரசிம்மா்.

பழனி, மே 23: பழனி சிவகிரிப்பட்டி புறவழிச்சாலையில் அமைந்துள்ள காரியசித்தி லட்சுமி நரசிம்மா் கோயிலில் வைகாசி பெளா்ணமியையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அப்போது லட்சுமி நரசிம்மருக்கு பால், பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம், தயிா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு தூபதீபம் காட்டப்பட்டு அா்ச்சனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து சுவாமிக்கு வண்ண மலா்கள், நகைகள், பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், பஞ்சதீப தீபாராதனையும் நடைபெற்றன. இந்தக் கோயிலில் புதன்கிழமை நரசிம்மா் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சமுக விநாயகா், ஆஞ்சநேயா், ஐயப்பன் சந்நிதிகளிலும் சுவாமிகளுக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ராமநாதன், வீரப்பன் மற்றும் மெய்யப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.