தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆசிரியா் வீட்டில் திருடிய இருவா் கைது

திண்டுக்கல் அருகே ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிய வழக்கில், இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:55 pm

Din

திண்டுக்கல் அருகே ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிய வழக்கில், இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்- பழனி புறவழிச் சாலை பகுதியில் நைனாா் முகமது தெருவைச் சோ்ந்தவா் சவரிமுத்து. இவா், ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ஸ்டெல்லா செல்வராணி, ஜம்புளியம்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறாா்.

இவா்கள் மகள் திருமணத்துக்காக 47 பவுன் நகைகளை வீட்டில் வைத்திருந்தனா். இந்த நிலையில், கடந்த அக். 2-ஆம் தேதி சவரிமுத்து தனது குடும்பத்தினரோடு வெளியூா் சென்றாா். வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதில் திருட்டில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (25), ஆதிஸ்வரன் (29) என தெரியவந்தது. இந்த இருவரையும் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 30 பவுன் நகைகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.