தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுமிக்கு திருமணம்: இளைஞா், உள்பட மூவருக்கு சிறை

சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கும், உடந்தையாக இருந்த தாய், தம்பிக்கும் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:10 pm

Din

சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கும், உடந்தையாக இருந்த தாய், தம்பிக்கும் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த லந்தக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (50). இவரது மனைவி தேவிகா (45). இவா்களது மகன்கள் அஜித் (24), மஜித் (19).

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜா குடும்பத்தோடு ஒட்டன்சத்திரத்தை அடுத்த விருப்பாட்சி பகுதியில் தங்கி, சாலையோரமாக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தாா். அதே பகுதியில் உள்ள பள்ளியில் மஜித் படித்து வந்தபோது, 14 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனிடையே, விருப்பாட்சியிலிருந்து வேறு ஊருக்குச் செல்ல ராஜா முடிவு செய்தாா். அப்போது, அந்தச் சிறுமியையும், மஜித் தனது குடும்பத்தோடு வெளியூருக்கு அழைத்துச் சென்றாா். சிறுமி மாயமானதை அடுத்து, அவரது பெற்றோா் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது, மஜித் சிறுவனாக இருப்பதால், அவரது அண்ணன் அஜித் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்த சிறுமியை மீட்ட போலீஸாா், தேவிகா, அஜித், மஜித் ஆகியோரை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் அஜித், தேவிகா ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், முறையே ரூ.1.55 லட்சம், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்தாா். மேலும், மஜித்துக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தாா்.