நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.

Updated On :13 நவம்பர் 2024, 9:57 pm

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை முதன்மை அலுவலா்களும் பங்கேற்கின்றனா்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பண்ணைக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளா்ப்பு, விவசாயக் கடன் தொடா்பான கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...