டாம்கோ கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக உயா்வு
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது .


தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது .
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்பு விவரம்:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனி நபா் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.
கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்று, உரிய ஆவணங்களுடன் நிறைவு செய்து பயன்பெறலாம் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...