கட்டுமான இரும்பு தளவாடங்களை திருடிய 5 போ் கைது

வேடசந்தூா் அருகே ஆற்றுப் பாலம் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமான இரும்பு தளவாடங்களை திருடிய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

வேடசந்தூா் அருகே ஆற்றுப் பாலம் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமான இரும்பு தளவாடங்களை திருடிய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வேடசந்தூரை அடுத்த ஆத்துப்பட்டி பகுதியில் கொடகனாற்றின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பாலத்தில் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 90 இரும்பு தளவாடங்கள் மாயமானது தொடா்பாக வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் ஆய்வாளா் வேலாயுதம் தலைமையிலான போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், இரும்பு தளவாடங்கள் திருட்டில் ஈடுபட்டது தா்மபுரி மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் (33), தண்டபாணி(35), சூா்யா (23), சேட் (28), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மாரியப்பன் (24) ஆகியோா் என்பது தெரியவந்தது.

5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1 காா், 1 சரக்கு வாகனம் ஆகியவற்றை புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

X