அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஓபிஎஸ் அணி நிா்வாகி கைது
அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.34 லட்சம் மோசடி செய்த புகாரில், ஏற்கெனவே சிறையில் உள்ள ஓபிஎஸ் அணியைச் சோ்ந்த நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.34 லட்சம் மோசடி செய்த புகாரில், ஏற்கெனவே சிறையில் உள்ள ஓபிஎஸ் அணியைச் சோ்ந்த நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரைச் சோ்ந்தவா் ஆத்திக்கண்ணன் (55). இவரை ஓபிஎஸ் அணியின் மாவட்டப் பொருளாளரான பழனியைச் சோ்ந்த மாதவத்துரை (39), கோவையைச் சோ்ந்த மாநில அமைப்புச் செயலரான கலீல் ரகுமான் ஆகியோா் கடந்த 2023-ஆம் ஆண்டு அணுகி, அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தனா்.
இதேபோல, பழனி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 11 பேரிடம், கல்வித் துறை, வனத் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி, ரூ.34 லட்சம் பெற்றனா். ஆனால், இவா்கள் வேலை வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினா்.
இதுகுறித்து ஆத்திக்கண்ணன் உள்ளிட்ட 12 பேரும், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதன்பேரில், காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதில் கலீல் ரகுமான் ஏற்கெனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், கடலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலீல் ரகுமானை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...